திருப்பூர்: உப்பாறு அணைக்கு தண்ணீர் திறப்பது தொடர்பாக அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று விவசாயிகளிடம் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் க.விஜயகார்த்திகேயன் உறுதியளித்துள்ளார்.
தாராபுரம் அருகே உப்பாறு அணைக்கு திருமூர்த்தி அணையில் இருந்து தண்ணீர் திறக்கக்கோரி அப்பகுதி விவசாயிகள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக திருப்பூர் மாவட்ட உப்பாறு பாசன விவசாயிகள் சங்கத்தினர் கடந்த டிசம்பர் 8 ஆம் தேதி முதல் டிசம்பர் 31 ஆம் தேதி வரையில் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும், அணையில் உள்ள பொதுப்பணித்துறை அலுவலகத்தையும் முற்றுகையிட்டனர். இதையடுத்து, விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்திய தாராபுரம் வட்டாட்சியர் ராமலிங்கம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பேச்சுவார்த்தை நடத்தி முடிவு செய்து கொள்ளலாம் என்று தெரிவித்திருந்தார்.
இதன்படி, திருப்பூர் மாவட்ட ஆட்சியர் க.விஜயகார்த்திகேயன் தலைமையில் செவ்வாய்க்கிழமை பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில், உப்பாறு அணைக்குத் தண்ணீர் திறப்பது தொடர்பாக விவசாயிகளின் நியாயமான கோரிக்கைகள் அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லப்படும். இதன் பிறகு அரசு அனுமதியுடன் உப்பாறு அணைக்கு மிக விரையில் தண்ணீர் திறக்க மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆட்சியர் உறுதியளித்தார்.
இந்தப் பேச்சுவார்த்தையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திஷா மிட்டல், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ஜெயசந்திரன், தாராபுரம் வட்டாட்சியர் ராமலிங்கம், திருப்பூர் மாவட்ட உப்பாறு பாசன விவசாயிகள் சங்கத்தலைவர் அர்ஜூனன், செயலாளர் சுந்தரசாமி, நிர்வாகக்குழு உறுப்பினர்கள் சிவகுமார், முருகானந்தம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


