யார் வேண்டுமானாலும் பதவியை ராஜிநாமா செய்யலாம் என மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளார்.
மேற்கு வங்க மாநிலத்தின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் லஷ்மி ரத்தன் சுக்லா தனது பதவியை செவ்வாய்க்கிழமை ராஜிநாமா செய்ததையடுத்து, முதல்வர் இக்கருத்தை தெரிவித்துள்ளார்.
அவரது ராஜிநாமா குறித்து மம்தா கூறியதாவது,
‘யார் வேண்டுமானாலும் ராஜிநாமா செய்யலாம். லக்ஷ்மி ரத்தன் சுக்லா தனது ராஜிநாமா கடிதத்தில், விளையாட்டுக்கு அதிக நேரம் ஒதுக்க விரும்புவதால் பதவியை ராஜிநாமா செய்வதாகவும், எம்.எல்.ஏ.வாக தொடர்ந்து செயல்படவுள்ளதாக தெரிவித்துள்ளார். இதை தவறாக எடுத்துக் கொள்ள வேண்டாம்’ எனக் கூறியுள்ளார்.
சுக்லாவின் பதவி விலகலுக்கான காரணம் இதுவரை அறியப்படவில்லை. எனினும் இவர் தொடர்ந்து திரிணமூல் கட்சியில் நீடிப்பார் என அக்கட்சியினர் தெரிவித்து வருகின்றனர்.
கடந்த ஆண்டின் இறுதியில் சுவேந்து ஆதிகாரி உள்ளிட்ட பல சட்டமன்ற உறுப்பினர்கள் திரிணமூல் கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தது குறிப்பிடத்தக்கது.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


