இந்தியாவில் புதிய வகை கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 38ஆக உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் திங்கள்கிழமை தெரிவித்துள்ளது.
புதிய வகை கரோனா கண்டறியப்பட்ட 38 பேரில் தமிழகத்தை சேர்ந்த ஒருவரும் பாதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
கடந்த டிசம்பர் மாதம், பிரிட்டனில் புதிய வகை அதிதீவிர கரோனா கண்டறியப்பட்டதை அடுத்து, அந்நாட்டில் இருந்து வரும் விமானங்களுக்கு தற்காலிக தடைவிதித்து, சமீபகாலமாக பிரிட்டனிலிருந்து வந்த பயணிகள், அவர்களுடன் தொடார்பில் இருந்தவர்களின் சளி மாதிரிகளை பரிசோதனை செய்து வருகின்றனர்.
அதில், கரோனா கண்டறியப்படுவோரின் சளி மாதிரிகள் மரபணு சோதனைக்கு உட்படுத்தப்படுகின்றது. அந்த சோதனை செய்ததில், இதுவரை 38 பேருக்கு பிரிட்டனில் கண்டறியப்பட்ட புதிய வகை கரோனா நோய்த் தொற்று இருப்பது தெரியவந்துள்ளது.
இந்நிலையில், அவர்கள் அனைவருக்கும் அந்தந்த மாநிலங்களில் தனிமைப்படுத்தும் அறையில் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றனர்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


