கேரள மாநிலத்தில் சுகாதார ஊழியர்களுக்கு கரோனா தடுப்பூசி போடுவதில் முன்னுரிமை வழங்கப்படும் என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் கரோனா தடுப்பூசிக்கான ஒத்திகை நாளை நடக்கும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில், வெள்ளிக்கிழமை செய்தியாளர்கள் சந்திப்பில் கேரள முதல்வர் பேசியதாவது,
மத்திய அரசு அளித்த தகவலின்படி, கரோனா தடுப்பூசி போடும் பணி இந்த மாதத்திலேயே தொடங்கப்படும். கேரளத்தில் தடுப்பூசி கிடைத்தவுடன், சுகாதார ஊழியர்களுக்கு முன்னிரிமை அடிப்படையில் முதலில் போடப்படும். தடுப்பூசியை விநியோகிக்க கேரள அரசு தயார் நிலையில் உள்ளதாக தெரிவித்தார்.
மேலும், ஊரடங்கு தளர்வு பற்றி பேசியதாவது,
ஜனவரி 5ஆம் தேதி முதல் திரையரங்குகள் மீண்டும் திறக்கப்படும். மேலும், குறைந்த அளவிலான பக்தர்களை கொண்டு வழிபாட்டுத் தலங்களில் பண்டிகைகளை கொண்டாட அனுமதி அளிக்கப்படுகிறது எனக் கூறினார்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


