பிரிட்டனுக்கு ஜனவரி 8ஆம் தேதி முதல் மீண்டும் விமான சேவை தொடங்கப்படும் என மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
பிரிட்டனில் தன்னைத்தானே தகவமைத்துக் கொண்ட புதிய அதி தீவிர கரோனா வைரஸ் கண்டறியப்பட்டதையடுத்து, இந்தியா - பிரிட்டன் இடையே டிசம்பர் 22-ம் தேதி நள்ளிரவு 11.59 மணி முதல் ஜனவரி 7-ம் தேதி நள்ளிரவு 11.59 மணி வரை தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டது.
இந்நிலையில், வெள்ளிக்கிழமை விமானப் போக்குவரத்து அமைச்சகம் வெளியிட்ட செய்தியில்,
இந்தியா-பிரிட்டன் இடையே ஜனவரி 8-ம் தேதி முதல் விமான சேவை மீண்டும் தொடங்கப்படவுள்ளது. இருப்பினும், ஜனவரி 23ஆம் தேதி வரை சில கட்டுப்பாடுகளுடன் வாரத்திற்கு 15 விமானங்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும்.
மேலும், இந்த விமானங்கள் அனைத்தும், தில்லி, மும்பை, ஹைதராபாத் மற்றும் பெங்களூரு விமான நிலையங்களில் இருந்து மட்டுமே இயக்கப்படும் எனத் தெரிவித்துள்ளனர்.
பிரிட்டனிலிருந்து இந்தியா வந்த 29 பேருக்கு புது வகை கரோனா கண்டறியப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


