திண்டுக்கல் மாவட்டத்தில் குடகனாறு அணையின் உட்பகுதியில் எலும்புக் கூடு ஒன்றை பொதுமக்கள் பார்த்து காவல்துறைக்கு தகவல் அளித்தனர்.
குடகனாறு அணையில் தண்ணீர் இல்லாமல் இருந்த உட்பகுதியில் எலும்புக் கூடு ஒன்று இருப்பதை அப்பகுதியில் மாடு மேய்க்க வந்தவர்கள் பார்த்து காவல்துறைக்கு தகவல் அளித்தனர்.
இதையடுத்து விரைந்து வந்த காவல்துறையினர், எலும்புக் கூடு மீதிருந்த ஆடையை அடையாளமாக வைத்து, இதுவரை காணாமல் போனவர்களின் பட்டியலை சேகரித்து விசாரணை நடத்தினர்.
அதில், கடந்த 2011ஆம் ஆண்டு காணாமல் போன பாலப்பட்டி கிராமம் நாச்சிமுத்துவின் மகள் நித்யா (16) என்பது தெரிய வந்துள்ளது. எலும்புக் கூடு மீதிருந்த ஆடையை அடையாளமாக வைத்து, அவரது பெற்றோர், அது தனது மகள் நித்யா, காணாமல் போன அன்று அணிந்திருந்த ஆடை என்பதை உறுதி செய்தனர்.
இதையடுத்து, எலும்புக் கூடை தடயவியல் நிபுணர்கள் சேகரித்து சென்னை ஆய்வக பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

