சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

வழிபாட்டுத் தலங்களை மேம்படுத்த மத்திய அரசு நிதி ஒதுக்கீடு

இந்தியாவில் திருப்பதி உட்பட பல்வேறு புகழ்பெற்ற வழிபாட்டுத் தலங்களை மேம்படுத்த மத்திய சுற்றுலா அமைச்சகம் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.

News image
Updated On :11 செப்டம்பர் 2013, 8:31 pm

இந்தியாவில் திருப்பதி உட்பட பல்வேறு புகழ்பெற்ற வழிபாட்டுத் தலங்களை மேம்படுத்த மத்திய சுற்றுலா அமைச்சகம் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.

ஆந்திராவில் உள்ள திருப்பதி கோயில் மற்றும் அதன் சுற்று வட்டராத்தில் உள்ள வரலாற்று புகழ்பெற்ற கோயில்களுக்கு வரும் பக்தர்களுக்கு வசதிகளை ஏற்படுத்த ரூ.1,395.75 லட்சமும், ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டத்தில் உள்ள வழிபாட்டுத் தலங்கள் மற்றும் சுற்றுலா இடங்களை மேம்படுத்த ரூ.1,107.87 லட்சமும் ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில், தாஜ் மஹாலையும், அஜந்தா - எல்லோரா பகுதிகளையும் காண வரும் சுற்றுலாப் பயணிகளை விட, திருப்பதிக்கு வருவோரின் எண்ணிக்கை தான் அதிகம். எனவே அங்கு வரும் மக்களுக்கு வசதிகளை அதிகப்படுத்த மத்திய அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.