சென்னை தலைமைச் செயலகத்தில், மறைந்த 66 வழக்குரைஞர்களின் வாரிசுதாரர்கள் / நியமனதாரர்களுக்கு நிதியுதவி வழங்கும் அடையாளமாக 7 பேருக்கு தலா 5 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய்க்கான காசோலைகளை வழங்கினார் தமிழக முதல்வர் ஜெயலலிதா.
இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், 1987-ஆம் ஆண்டு தமிழ்நாடு வழக்குரைஞர்கள் நல நிதியச் சட்டத்தின் கீழ், தமிழ்நாடு வழக்குரைஞர்கள் நலநிதியத்தின் உறுப்பினர் ஒருவர் உயிரிழந்தால் அவரது சட்டபூர்வ வாரிசுதாரருக்கு அல்லது நியமனதாரருக்கு வழக்கறிஞர்கள் நல நிதியத்திலிருந்து நிதியுதவி அளிக்கப்பட்டு வருகிறது.
கடந்த 2012ம் ஆண்டு முதல் தமிழ்நாடு வழக்குரைஞர்கள் நல நிதியத்தின் உறுப்பினராக உள்ள வழக்குரைஞர்களின் மறைவின் போது, அவர்களின் வாரிசுதாரர்கள் / நியமனதாரர்களுக்கு வழங்கப்படும் நிதியுதவி 2 லட்சம் ரூபாயிலிருந்து 5 லட்சத்து 25 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும் என்று முதல்வர் அறிவித்தார்.
இந்த உதவித் தொகையை இடையூறு இல்லாமல் தொடர்ந்து வழக்கறிஞர்களின் வாரிசுதாரர்களுக்கு வழங்குவதற்கு ஏதுவாக தமிழ்நாடு வழக்குரைஞர்கள் நலநிதியத்திற்கு ஆண்டு தோறும் 4 கோடி ரூபாய் தமிழக அரசின் மானியமாக வழங்கப்படும் என்றும் அறிவித்தார்.
தமிழ்நாடு வழக்கறிஞர்கள் நல நிதியச் சட்டத்தின் கீழ் உறுப்பினராக பதிவு செய்த வழக்குரைஞர்களுக்கு அவர்களின் பதிவு காலத்தை கணக்கில் எடுத்துக் கொள்ளாமல், ஒரே சீராக எந்தவித வகைப்பாடும் இல்லாமல் மறைந்த வழக்குரைஞர்களின் வாரிசுதாரர்கள் / நியமனதாரர்களுக்கு 5 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் நிதி உதவி வழங்கப்படும் என்று முதல்வர் அறிவித்தார்.
அதன்படி, மறைந்த 66 வழக்குரைஞர்களின் வாரிசுதாரர்கள் / நியமனதாரர்களுக்கு தலா 5 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் என மொத்தம் 3 கோடியே 46 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது. அவர்களில் 7 வாரிசுதாரர்கள் / நியமனதாரர்களுக்கு நிதியுதவியாக தலா 5 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய்க்கான காசோலைகளை முதல்வர் இன்று வழங்கினார்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

