யாரை வேண்டுமானாலும் பிரதமர் வேட்பாளராக பாரதிய ஜனதா கட்சி அறிவிக்கட்டும், ஆனால் காங்கிரஸ் கட்சியைப் பொருத்தவரை துணை தலைவர் ராகுல் காந்தியின் தலைமையில் தான் நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்வோம் என்று மத்திய உள்துறை அமைச்சர் சுஷீல் குமார் ஷிண்டே கூறினார்.
2014 -ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் பிரதமர் வேட்பாளராக குஜராத் முதல்வர் நரேந்தர் மோடியை நிறுத்த அக்கட்சி முயற்சி மேற்கொண்டு வருகிறது.இதற்காக பாஜக ஆட்சிமன்றக் குழுக் கூட்டம் நாளை தில்லியில் கூடி முடிவு எடுக்கவுள்ளது. இந்நிலையில் நரேந்தர் மோடியை பிரதமர் வேட்பாளராக முன்னிலைப்படுத்த பாரதிய ஜனதா கட்சி மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் சுஷில் குமார் ஷிண்டேவிடம் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, "வரும் நாடாளுமன்ற தேர்தலில் சிறிய மற்றும் பெரிய கட்சிகள் தங்கள் கட்சியின் சார்பில் போட்டியிடும் பிரதமர் வேட்பாளராக ராமு, ஷாமு என்று யாரை வேண்டுமானலும் அறிவிக்கலாம். ஆனால், காங்கிரஸ் கட்சியைப் பொருத்த வரை துணைத் தலைவர் ராகுல் காந்தி தலைமையில் நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்ளப்படும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டுவிட்டது என்று சுஷீல் குமார் ஷிண்டே கூறினார்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


