ஆந்திர மாநிலத்திலிருந்து சென்னைக்கு ரயிலில் கஞ்சா கடத்தி வந்த 3 பேருக்கு, சென்னைஉயர்நீதி மன்றம் மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது.
சென்னையில் உள்ள போதைப்பொருள் ஒழிப்பு மற்றும் தடுப்பு பிரிவு போலீசார், கடந்த 2.7.2008-ஆம் தேதி ரோந்து சென்றனர். அப்போது ஆந்திர மாநிலத்திலிருந்து வரும் டேராடூன் விரைவு ரயிலில் கஞ்சா கடத்தப்படுவதாக கிடைத்த தகவலின் பேரில், திருவெற்றியூர் ரயில் நிலையத்திற்குச் சென்று போலீஸார் ஆய்வு செய்தனர்.அப்போது 64 கிலோ அளவில் கஞ்சா கடத்திக்கொண்டு அந்த ரயிலில் வந்து இறங்கிய சென்னையைச் சேர்ந்த பாண்டியராஜன்(32),சேதுராமன்(31),ஜெயப்பிரகாஷ்(19) ஆகியோரை போலீஸார் கைது செய்தனர்.
இந்த வழக்கின் விசாரணை சென்னையில் உள்ள போதைப்பொருள் தடுப்பு பிரிவு நீதிமன்றத்தில் நீதிபதி வி.ராமமூர்த்தி முன்னிலையில் நடந்தது. வழக்கை விசாரித்து வந்த நீதிபதி,கஞ்சா கடத்திய பாண்டியராஜன்,சேதுராமன்,ஜெயப்பிரகாஷ் ஆகியோருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனையும்,தலா ரூ.20 ஆயிரம் அபராதமும் விதித்து,புதன் கிழமை தீர்ப்பளித்தார். இந்த வழக்கில் அரசு வழக்கறிஞர் டி.கண்ணன் ஆஜரானார்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

