சேலத்தில் 3 ஆண்டுகளுக்கு முன்பு பெண் தற்கொலை செய்து கொண்டு உயிரிழந்த சம்பவத்தில், அவளது கணவர் மற்றும் அவரது பெற்றோருக்கு நீதிமன்றம் தலா 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
2007ஆம் ஆண்டு இந்த தம்பதிக்கு திருமணம் நடந்துள்ளது. ஆனால் அவர்களுக்கு குழந்தை இல்லை. இதனை காரணம் காட்டி கணவர் குடும்பத்தார் அப்பெண்ணை துன்புறுத்தியுள்ளனர். கடந்த 2010ஆம் ஆண்டு ஊர் மக்கள் முன்னிலையில் அப்பெண்ணை அடித்து துன்புறுத்தியுள்ளனர். இதனால் மனமுடைந்த அப்பெண் தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்த வழக்கு விசாரணை சேலம் மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. விசாரணை முடிந்து நீதிபதி கிருஷ்ணன் செவ்வாய்க்கிழமை இரவு தீர்ப்பளித்தார். தீர்ப்பில், பெண்ணின் தற்கொலைக்கு காரணமாக இருந்த கணவர் மற்றும் அவரது பெற்றோருக்கு தலா 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், தலா ரூ.5000 ஆயிரம் அபராதமும் விதிக்கப்படுகிறது. மேலும், அப்பெண்ணை துன்புறுத்தியதற்கு மூவருக்கும் தலா 3 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், தலா ரூ.1000 அபராதமும் விதிக்கப்படுகிறது. இந்த தண்டனையை அவர்கள் ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என்றும் நீதிபதி குறிப்பிட்டுள்ளார்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

