நீர்மூழ்கிக் கப்பலில் உயிரிழந்த இரண்டு வீரர்களின் உடல்கள் அவர்களின் சொந்தமான மாநிலமான அசாமுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
மும்பை கடற்படைத் தளத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஐஎன்எஸ் சிந்துரக்ஷக் நீர்மூழ்கிக் கப்பல் கடந்த ஆகஸ்ட் 14-ஆம் தேதி வெடித்து நீரில் மூழ்கியது. இதிலிருந்த 18 வீரர்களும் உயிரிழந்தனர்.இந்நிலையில் கப்பலிலிருந்து மீட்கப்பட்ட வீரர்களின் உடல்கள் டிஎன்ஏ சோதனைக்கு அனுப்பப்பட்டது. இதில் பொறியாளர் நாரோட்டம் தேரி மற்றம் டிமோதி சின்ஹா ஆகியோரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டது. இவர்கள் இருவரும் அசாம் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள். இவர்களின் உடல்கள் அவர்களின் சொந்த ஊருக்கு இன்று அனுப்பப்பட்டது.
நாரோட்டம் தேரியின் உடலை போர்ஜார் சர்வதேச விமானத்தில் அவரது உறவினர்கள் பெற்றுக் கொண்டனர். அவருக்கு முப்படைகளின் சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது. இதையடுத்து அவரது உடல் லட்சுமிபூர் மாவட்டம் நாராயண்பூருக்குக் கொண்டு செல்லப்பட்டது.சில்சார் விமான நிலையத்தில் டிமோதியின் உடலை காசேர் மாவட்ட அதிகாரிகள் பெற்றுக் கொண்டனர். பின்னர் அவரது உடல் சொந்த ஊருக்குக் கொண்டு செல்லப்பட்டது.
நாட்டுக்காக உயிரிழந்த டிமோதியின் உடலுக்கு அரசு மரியாதை கொடுக்கப்படாததற்கு அங்குள்ள மாணவர் அமைப்பினர் கடும் கண்டனம் தெரிவித்தனர்.இறந்த தேரி 2001 ஆம் ஆண்டு இந்திய கடற்படையில் சேர்ந்தார். இவரும், டிமோதியும் கடந்த ஆண்டில்தான் ஐஎன்எஸ் சிந்துரக்ஷக் நீர்மூழ்கிக் கப்பலில் பணியில் சேர்ந்தனர்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

