சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

திருச்சி – நெல்லை இன்டர்சிட்டி ரயிலை நாகர்கோவில் வரை நீட்டிக்க கோரிக்கை

திருச்சி – திருநெல்வேலி பகல் நேர இன்டர்சிட்டி ரயிலை நாகர்கோவில் வரை நீட்டித்து இயக்க நடவடிக்கை எடுக்குமாறு ராதாபுரம் நான்குநேரி தாலுகா ரயில் பயணிகள் சங்கத்தின் சார்பாக தெற்கு ரயில்வே அதிகாரிகளுக்கும், நெல்லை எம்.பிக்கும் கோரிக்கை மனு அளிக்கபட்டது.

Updated On :11 செப்டம்பர் 2013, 6:54 pm

திருச்சி – திருநெல்வேலி பகல் நேர இன்டர்சிட்டி ரயிலை  நாகர்கோவில் வரை நீட்டித்து இயக்க நடவடிக்கை எடுக்குமாறு ராதாபுரம் நான்குநேரி தாலுகா ரயில் பயணிகள் சங்கத்தின் சார்பாக தெற்கு ரயில்வே அதிகாரிகளுக்கும், நெல்லை எம்.பிக்கும் கோரிக்கை மனு அளிக்கபட்டது.

இது குறித்து சங்கத்தின் தலைவர் ராஜ்குமார் கூறியதாவது, கடந்த 2012 ரயில் பட்ஜெட்டில் திருச்சி – திருநெல்வேலி வழி தடத்தில் 22627-22628  என்ற எண் கொண்ட  பகல் நேர தினசரி இன்டர்சிட்டி ரயில் அறிவிக்கபட்டு இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயில் திருச்சியிலிருந்து காலையில் 7:15க்கு புறப்பட்டு திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்ப்பட்டி, வாஞ்சி மணியாச்சி வழியாக மதியம் 1:00 மணிக்கு திருநெல்வேலி வந்து சேர்ந்து மதியம் திருநெல்வேலியிருந்து 2:15க்கு புறப்பட்டு இரவு திருச்சிக்கு 8:00 மணிக்கு செல்கிறது. இந்த ரயில் பகல் நேர ரயிலாக இருப்பதால் ராதாபுரம் மற்றும் நான்குநேரி தாலுகா வியாபாரிகளுக்கு மதுரை, விருதுநகர் சந்தையிலிருந்து சரக்கு போக்குவரத்துக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இந்த ரயிலை ராதாபுரம் மற்றும் நான்குநேரி தாலுகா மக்களின் நலன் கருதி நாகர்கோவில் வரை நீட்டிப்பு செய்து இயக்க நடவடிக்கை எடுக்குமாறு ராதாபுரம் நான்குநேரி தாலுகா ரயில் பயணிகள் சங்கத்தின் சார்பாக கோரிக்கை நெல்லை எம்.பியிடம் வைக்கபட்டுள்ளது.

வள்ளியூரில் நிறுத்தம்: இந்த ரயிலை நாகர்கோவில் வரை நீட்டிப்பு செய்து இயக்கும் பட்சத்தில் வள்ளியூர் மற்றும் நான்குநேரி ரயில் நிலையத்தில் நிரந்தரமாக நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. நெல்லை எம்.பியும் நடவடிக்கை எடுத்து இந்த ரயில் நீட்டிப்பு செய்யும் பட்சத்தில் நெல்லை மாவட்டத்தில் உள்ள முக்கிய நிறுத்தங்களில் நிறுத்தி செல்ல நடவடிக்கை எடுப்பதாக உறுதி கூறியுள்ளார் என்று கூறினார்.