சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

தலைமறைவாக இருந்த ரௌடிகள் கைது

மேற்கு மாம்பலம் மூர்த்தித் தெருவைச் சேர்ந்தவர் மா. சேகர் என்ற ஆட்டோ சேகர் (45). மேற்கு மாம்பலம் புஷ்பவதி அம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த சு. சிவா (39. இவர்கள் இருவர் மீதும் அடிதடி, கொலை

Updated On :12 செப்டம்பர் 2013, 12:15 am

சென்னையில் தலைமறைவாக இருந்த இரு ரௌடிகள் கைது செய்யப்பட்டனர்.

மேற்கு மாம்பலம் மூர்த்தித் தெருவைச் சேர்ந்தவர் மா. சேகர் என்ற ஆட்டோ சேகர் (45). மேற்கு மாம்பலம் புஷ்பவதி அம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த சு. சிவா (39. இவர்கள் இருவர் மீதும் அடிதடி, கொலை மிரட்டல், கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன. இந்நிலையில் சேகர் மீது அசோக்நகர், கோட்டூர்புரம் காவல் நிலையங்களில் பதியப்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன.இதேபோல சிவா மீதும் கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் பதியப்பட்ட ஒரு வழக்கு நிலுவையில் உள்ளது. இந்த வழக்கு விசாரணைக்கு ஆஜராகாமல் இருவரும் தலைமறைவாக இருந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் ரௌடிகள் கண்காணிக்கும் பிரிவு போலீஸார் தலைமறைவாக இருந்த இருவரையும் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர். பின்னர் போலீஸார் இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, புழல் மத்திய சிறையில் அடைத்தனர்.