சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

தமிழக மீனவர்கள் விவகாரம் : மத்திய அரசுக்கு நோட்டீஸ்

இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்கள் விவகாரத்தில் பதில் அளிக்கக் கோரி மத்திய அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.

News image
Updated On :11 செப்டம்பர் 2013, 8:26 pm

இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்கள் விவகாரத்தில் பதில் அளிக்கக் கோரி மத்திய அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.

தமிழக மீனவர்கள் பாதுகாப்பு நலச் சங்கம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில், இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்களை விடுவிக்கக் கோரியும், கச்சத் தீவு விவகாரத்தில் மத்திய அரசின் நிலைப்பாட்டை தெளிவுபடுத்தக் கோரியும் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், தமிழக மீனவர்கள் விவகாரத்தில் 4 வாரங்களுக்குள் பதிலளிக்கவும், கச்சத் தீவு விவகாரத்தில் மத்திய அரசின் நிலைப்பாட்டை தெளிவுப்படுத்தவும் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.