மருத்துவ சிகிச்சைக்காக வெளிநாடு சென்றிருந்த காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி புதன்கிழமை காலை இந்தியா திரும்பினார்.
தனது மகள் பிரியங்காவுடன் இன்று அதிகாலை சோனியா புது தில்லி விமான நிலையத்தில் வந்திறங்கியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
உடல் நிலைக் குறைவு காரணமாக செப்டம்பர் 2ஆம் தேதி அமெரிக்க சென்றார் சோனியா. அங்கு வழக்கமான மருத்துவ பரிசோதனைகளை முடித்துக் கொண்டு இன்று நாடு திரும்பினார்.
கடந்த ஆகஸ்ட் மாதம் மக்களவையில் உணவுப் பாதுகாப்பு மசோதா மீதான விவாதத்தில் பங்கேற்றபோது, சோனியாவுக்குத் திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது.
இதையடுத்து அவர் உடனடியாக எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. சுமார் 5 மணி நேரம் மருத்துவமனையில் இருந்து சிகிச்சை முடிந்து வீடு திரும்பியது குறிப்பிடத்தக்கது.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


