2011-2012ஆம் ஆண்டில் தேர்வு செய்யப்பட்டு கால்நடை ஆய்வாளர் பயிற்சி முடித்த 289 பேர்களுக்கு கால்நடை ஆய்வாளர் நிலை-2க்கான பணி நியமன ஆணைகளை முதல்வர் ஜெயலலிதா இன்று தலைமைச் செயலகத்தில் வழங்கினார்.
இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், தமிழகத்தில் கால்நடை மருத்துவ வசதிகளைப் பெரிதும் மேம்படுத்துவதற்கு பல செம்மையான திட்டங்களை முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான அரசு செயல்படுத்தி வருகிறது. கால்நடை பராமரிப்புத் துறை, தமிழகத்திலுள்ள அனைத்து கால்நடைகளுக்கும் மருத்துவ சிகிச்சை மற்றும் மேம்பட்ட பராமரிப்பு முறை சேவைகளை கால்நடை மருந்தகங்கள் மற்றும் கால்நடை மருத்துவமனைகள் மூலம் வழங்கி வருகிறது.
மேலும், கால்நடை கிளை நிலையங்களில் செயற்கை முறை கருவூட்டல் மற்றும் முதலுதவி சேவைகள் கால்நடை ஆய்வாளர்கள் மூலம் கால்நடைகளுக்கு வழங்கப்பட்டு வருகின்றன. கிராமப்புற ஏழை எளிய மக்களின் கால்நடைகளுக்கு கள அளவில் நோய் தடுப்பு பணிகளை ஆற்றிடும் வகையில் 2011-2012ஆம் ஆண்டில் தேர்வு செய்யப்பட்டு கால்நடை ஆய்வாளர் பயிற்சி முடித்த 289 பேர்களுக்கு கால்நடை ஆய்வாளர் நிலை-2க்கான பணி நியமன ஆணைகளை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதா இன்று தலைமைச் செயலகத்தில் வழங்கினார்.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

