குடியிருப்பு வளாகத்தில் வீடு வாங்குவோரிடம், கார் நிறுத்துமிடத்துக்காக தனியாக கட்டணம் வசூலிக்கக் கூடாது என்று மத்திய மும்பை மாவட்ட நுகர்வோர் தீர்ப்பாயம் அறிவுறுத்தியுள்ளது.
சுரேஷ் மேஹ்தா என்பவர், கார் நிறுத்துமிடத்துக்காக பணம் வசூலித்தது குறித்து தொடர்ப்பட்ட மனுவை விசாரித்த தீர்ப்பாயம், கார் நிறுத்துமிடத்துக்காக, வீடு வாங்கியவர்களிடம் தனியாக கட்டணம் வசூலிக்கக் கூடாது என்றும், அவ்வாறு வசூலித்தால் அதற்கு அபராதம் விதிக்கப்படும் என்றும் கூறியுள்ளது.
மேலும், சுரேஷ் மேஹ்தாவுக்கு அவர் செலுத்திய ரூ.50000த்தை திருப்பி அளிக்கவும், ரூ.20,000 ஐ அபராதமாக செலுத்துமாறும் உத்தரவிட்டுள்ளது.
உத்தரவில், கார் நிறுத்துமிடம் என்பது ஒரு பொதுவான பகுதி. அதனை குடியிருப்பை கட்டும் நிறுவனத்தார் விற்பனை செய்து அதற்காக பணத்தை பெறக் கூடாது என்று கூறியுள்ளது.
குடியிருப்பு வளாகத்தில் வீடுகளை மட்டுமே விற்பனை செய்ய வேண்டும், கார் நிறுத்துமிடங்களை விற்கக் கூடாது என்று உச்ச நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பினைத் தொடர்ந்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


