சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

சிகிச்சைக்காக அமெரிக்கா செல்கிறார் சோனியா காந்தி

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, சிகிச்சைக்காக அமெரிக்காவுக்குச் செல்கிறார். ஞாயிற்றுக்கிழமை கட்சியின் மூத்த தலைவர் ஒருவர், மருத்துவ சோதனைக்காக சோனியா காந்தி அமெரிக்காவுக்குச் செல்கிறார் என்று தெரிவித்தார்.

Updated On :2 செப்டம்பர் 2013, 2:59 pm

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, சிகிச்சைக்காக அமெரிக்காவுக்குச் செல்கிறார். ஞாயிற்றுக்கிழமை கட்சியின் மூத்த தலைவர் ஒருவர், மருத்துவ சோதனைக்காக சோனியா காந்தி அமெரிக்காவுக்குச் செல்கிறார் என்று தெரிவித்தார்.

கடந்த ஆகஸ்ட் 2011ல் உடல் நலக் குறைவு காரணமாக  மருத்துவ சிகிச்சை பெற அவர் அமெரிக்காவுக்குச் சென்றார். பின்னர் பிப்ரவரி மற்றும் செப்டம்பர் என சென்ற வருடத்தில்  இரண்டு முறை அமெரிக்காவுக்குச் சென்று உடல் பரிசோதனைகளை மேற்கொண்டார்.

இந்நிலையில், ஆக.26ம் தேதி நாடாளுமன்றத்தில் நடைபெற்ற விவாதத்தில் பங்கேற்ற சோனியா, பேச்சை முடித்துக் கொண்ட போது, உடல் நலக் குறவால் அவதிப்பட்டு தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார். இந்நிலையில் அவர் இன்று அமெரிக்காவுக்கு மருத்துவ பரிசோதனைக்காக செல்லவுள்ளார்.