சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

சட்டத்தில் காலத்துக்கேற்ற மாற்றம் தேவை : கபில் சிபல்

சமூக, பொருளாதார மாற்றங்களுக்கு ஏற்ப சட்டத்திலும் மாற்றம் செய்யப்பட வேண்டும். அப்படி செய்தால் தான் சிறப்பான பலனை பெற முடியும் என்று மத்திய சட்டத் துறை அமைச்சர் கபில் சிபல் தெரிவித்துள்ளார்.

News image
Updated On :2 செப்டம்பர் 2013, 4:14 pm

சமூக, பொருளாதார மாற்றங்களுக்கு ஏற்ப சட்டத்திலும் மாற்றம் செய்யப்பட வேண்டும். அப்படி செய்தால் தான் சிறப்பான பலனை பெற முடியும் என்று மத்திய சட்டத் துறை அமைச்சர் கபில் சிபல் தெரிவித்துள்ளார்.

பெங்களூருவில் உள்ள தேசிய சட்டப் பள்ளி மற்றும் இந்திய பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா ஞாயிறன்று நடைபெற்றது.

இதில் கலந்து கொண்டு பேசிய கபில் சிபல், சட்டத்தில் தொழில்நுட்பத்தை பயன்படுத்துவது மோசமான தீர்ப்புக்கே வழி வகுக்கும். அனைத்து சட்டமும் ஒரு மனிதனைப் போன்றது. இதயம் இல்லாத மனிதனாகவே சட்டம் உள்ளது.

சமூக அமைப்பு, சமுதாயம் என நிரந்தரமில்லாமல் மாறிக் கொண்டே இருப்பது போல, காலத்துக்கு ஏற்ப சட்டத்தையும் மாற்றிக் கொண்டே வந்தால்தான் அதன் பலனை முழுமையாக அனுபவிக்க முடியும் என்று கூறினார்.