ஒசூர் அருகே சாலையோரம் இருந்த ஆலமரம் திடீரென வேரோடு முறிந்து தனியார் பேருந்து மீது விழுந்தது. இதில், 10 பேர் படுகாயமடைந்தனர். ஓட்டுனரின் சாமர்த்தியத்தால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இந்த விபத்தால் அந்த பகுதியில் 4 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
தர்மபுரியிலிருந்து ஞாயிற்றுக்கிழமை காலை 50 பயணிகளை ஏற்றிக்கொண்டு தனியார் பேருந்து ஒசூர் நோக்கி சென்று கொண்டிருந்தது. பேருந்தை பாலக்கோடு அருகே மதகேரி பகுதியை சேர்ந்த டிரைவர் முருகன் ஓட்டிச் சென்றார். ஒசூர் ஒன்னல்வாடி அருகே சென்றபோது, சாலையோரம் இருந்த பெரிய ஆலமரம் திடீரென வேரோடு முறிந்து சாய்ந்தது. இதை கவனித்த ஓட்டுனர், பேருந்தின் பிரேக் போட்டு நிறுத்தியுள்ளார்.
இருந்தபோதிலும், பேருந்தின் முன் பகுதியில் மரம் விழுந்தது. இதில், பேருந்தின் முன்பக்க கண்ணாடி உடைந்து சாலையில் சிதறியது. மேலும் பேருந்தில் முன்பக்கத்தில் அமர்ந்திருந்த சிங்காரப்பேட்டையை சேர்ந்த வெங்கட்ராமன், தொப்பூரை சேர்ந்த சாந்தி (40), பாலக்கோட்டைச் சேர்ந்த நடத்துனர் அசோக்குமார் (40) உள்பட 10 பேர் படுகாயம் அடைந்தனர்.
படுகாயம் அடைந்த அனைவரும் ஒசூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது.
ஓட்டுனரின் சாமர்த்தியத்தால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இதை கவனிக்காமல் இருந்திருந்தால் உயிர்ச்சேதம் ஏற்பட்டிருக்கும் என்று கூறப்படுகிறது.
சாலையில் மரம் முறிந்து விழுந்ததால், அந்த பகுதியில் சுமார் 4 மணி போக்குவரத்து பாதிக்கப்பட்டது. ஒசூரிலிருந்து தர்மபுரி செல்லும் பேருந்துகளும், தர்மபுரியிலிருந்து ஒசூர் செல்லும் பேருந்துகள் தொரப்பள்ளி வழியாக திருப்பி விடப்பட்டன.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

