சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

மதுக்கடையை அகற்றக் கோரி மறியல்: வைத்திலிங்கம் உள்பட 200 பேர் கைது

கருவடிக்குப்பம் கிழக்குக் கடற்கரைச் சாலை பகுதியில் மதுக்கடை அமைப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து காங்கிரஸார்

Updated On :22 ஆகஸ்ட் 2013, 11:45 pm

கருவடிக்குப்பம் கிழக்குக் கடற்கரைச் சாலை பகுதியில் மதுக்கடை அமைப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து காங்கிரஸார் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

புதுச்சேரி, கருவடிக்குப்பம், சாமிபிள்ளைத் தோட்டம் கிழக்கு கடற்கரைச் சாலை பகுதியி் தனியார் மதுபானக் கடை அமைக்க அரசு அனுமதி அளித்தது. இதற்கு பொதுமக்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர். இது தொடர்பாக, சமீபத்தில் நடந்து முடிந்த பேரவைக் கூட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் வைத்திலிங்கம் அப்பகுதியி்ல் மதுக்கடை அமைக்க எதிர்ப்புத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், புதன்கிழமை அந்த இடத்தில் மதுக்கடை திறக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதாகத் தெரிகிறது. இதனால் ஆத்திரமுற்ற அப்பகுதி பொதுமக்கள் மற்றும் காங்கிரஸ் கட்சியினர் கிழக்கு கடற்கரை சாலை சிவாஜி சிலை அருகே சாலைமறியலில் ஈடுபட்டனர். சாலை மறியல் போராட்டத்துக்கு எதிர்க்கட்சித் தலைவர் வைத்திலிங்கம் தலைமை வகித்தார்.

மறியலில் ஈடுபட்டவர்களுடன் போலீஸார் பேச்சு வார்த்தை நடத்தினர். மறியலைக் கைவிட போராட்டக்காரர்கள் மறுக்கவே, அவர்களைக் கைது செய்தனர். எம்.எல்.ஏ. வைத்திலிங்கம், காங்கிரல் மாநில செயலாளர் முனுசாமி, இளைஞர் காங்கிரஸ் தொகுதி தலைவர் அன்பழகன் உள்பட 100க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டனர்.