சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

நிலக்கரி ஆவணங்கள் மாயம் : நாடாளுமன்றத்தில் கடும் அமளி

நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு குறித்த ஆவணங்கள் மாயமானது குறித்த நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வருகின்றன.

Updated On :22 ஆகஸ்ட் 2013, 5:54 pm

நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு குறித்த ஆவணங்கள் மாயமானது குறித்து நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வருகின்றன.

நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு குறித்த ஆவணங்கள் மாயமானது குறித்து பிரதமர் நாடாளுமன்றத்தில் விளக்கம் அளிக்க வேண்டும் என்று கோரி பாஜக உறுப்பினர்கள் கோஷம் எழுப்பி வருகின்றனர்.

இன்று காலை மாநிலங்களவை கூடியதும் எதிர்க்கட்சிகளின் அமளியால் அவை நடவடிக்கை 11 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. பிறகு 11 மணிக்கு அவை மீண்டும் கூடிய போதும், பாஜக உறுப்பினர் ரவி ஷங்கர் பிரசாத், காணாமல் போன ஆவணங்களை தேடவும், அது குறித்து விசாரணை நடத்தவும் பிரதமர் மன்மோகன் சிங் நாடாளுமன்றத்தில் உறுதி அளிக்க வேண்டும் என்று கோஷமிட்டார்.

கேள்வி நேரத்தை நடத்த அனுமதிக்குமாறு அவைத் தலைவர் ஹமீத் அன்சாரி கோரிக்கை விடுத்தும், எதிர்க்கட்சிகள் தொடர்ந்து கோஷமெழுப்பிக் கொண்டே இருந்தனர்.

இதே நிலைதான் மக்களவையிலும் நீடித்தது. பிரதமர் விளக்கம் அளிக்க வேண்டும் என்ற பாஜகவினர் தொடர்ந்து கோஷம் எழுப்பியதால், அவை மதியத்துக்கு ஒத்திவைக்கப்பட்டது.