இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் மைய கணினி இணைப்பில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு தொடர்ந்து நீடிப்பதால் லட்சக்கணக்கான வாடிக்கையாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மைய வங்கி கணினி இணைப்பில்(கோர் பேங்கிங் சர்வர்)ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறால் திங்கள்கிழமை முதல் பணப்பரிமாற்றம், காசோலை பரிமாற்றம், பணம் செலுத்துதல் போன்ற அன்றாட வங்கிச் சேவைகள் முற்றிலும் பாதிக்கப்பட்டன.
பொதுத் துறை வங்கிகளில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி (ஐ.ஓ.பி.,) முக்கிய இடம் வகிக்கிறது. இந்த வங்கி நாடு முழுவதும் மூவாயிரம் கிளைகளை கொண்டுள்ளது. இதன் தலைமை அலுவலகம் சென்னை அண்ணாசாலையில் உள்ளது. தமிழகத்தில் மட்டும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கிளைகள் உள்ளன.
இந்த கோளாறால் நாடு முழுவதும் ஐ.ஓ.பி.,யின் வங்கி நடவடிக்கைகள் முடங்கின. லட்சக்கணக்கான வாடிக்கையாளர்களை கொண்டுள்ள இந்த வங்கியில் கடந்த நான்கு நாள்களாக வாடிக்கையாளர் சேவைகள் அனைத்தும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில் புதன்கிழமையன்று மட்டும் கணினியில் ஏற்பட்ட கோளாறு சீரடைந்து சில மணி நேரம் வங்கி நடவடிக்கைகள் நடைபெற்றன. அப்போது வங்கி காசோலைகள் பரிவர்த்தனை மட்டும் நடந்தது. அதன் பின்பு மீண்டும் பழைய நிலையே நீடித்தது.
தொடர்ந்து நீடிக்கும் பிரச்னையால் வாடிக்கையாளர்கள் பணம் எடுக்கவோ, பணத்தை செலுத்தவோ முடியாமல் அவதிப்படுகின்றனர். சேவை பாதிப்பு குறித்து வங்கி நிர்வாகம் இதுவரை உரிய விளக்கம் தராததால் வாடிக்கையாளர்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

