போலீஸ் அனுமதி பெறாமல் வேன்களை ஏற்றி்ச சென்ற சம்பவத்தி்ல 2 ஓட்டுனர்களை, போலீஸார், கைது செய்தனர்.
ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் அருகே சிக்கலில் தமிழக முன்னேற்ற கழக பொது செயலர் கணேச பாண்டியன் மனைவு நினைவு நாள் நிகழ்ச்சிக்கு, வாடகை வாகனங்களில் யாரையும் ஏற்றிச் செல்லக்கூடாது என்று போலீஸார் தடை விதித்திருந்தனர். ஆனால் வடக்கு மல்லல் என்ற ஊரைச் சேர்ந்த உலகம்மாள் என்பவரது வேனில் சிக்கலுக்கு ஆட்களை, வேன் ஓட்டுனர் முனியாண்டி மகன் பால்பாண்டி ஏற்றிச் சென்றாராம். இதே போன்று முதுகுளத்தூர்-மீனாட்சிபுரத்தை சேர்ந்த பிரபாகர் மகன் ஓட்டுனர் பாபு, சிலரை வேனில் சிக்கலுக்கு ஏற்றிச்சென்றாராம்.
போலீஸ் அனுமதி பெறாமலும், சாதி ஒற்றுமைக்கு பாதகம் விளைவிக்கும் வகையிலும், வாகன சட்ட விதிமுறைகளை மீறியும் வேன் ஓட்டிச் சென்றதாக இருவரையும் கைது செய்யும்படி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எம்.என். மயில் வாகணன் உத்தரவிட்டார். இதையடுத்து ஓட்டுனர் பால்பாண்டியை ஏர்வாடி தருகா காவல் நிலைய ஆய்வாளர் முத்து ராஜாவும், பாபுவை முதுகுளத்தூர் காவல் ஆய்வாளர் ஜேசுவும் கைது செய்தனர். இருவரும் முதுகுளத்தூர் மற் றும் ராமநாதபுரம் ஆகிய நீதி மன்றங்களில் ஆஜர் செய்யப்பட்டு, 15 நாள் காவலில் வைக்கப்பட்டனர்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

