சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

பாகிஸ்தான் ராணுவத்தைவிட இந்திய ராணுவம் பல மடங்கு வலிமையானது: சுதர்சன நாச்சியப்பன்

பாகிஸ்தான் ராணுவம் இந்திய வீரர்களை சுட்டுக் கொன்றது. இதனால் இந்திய ராணுவத்தை வலிமையற்றதாக கருதி விடமுடியாது. பாகிஸ்தான் ராணுவத்தைவிட  இந்திய ராணுவம் பல மடங்கு

Updated On :11 ஆகஸ்ட் 2013, 9:05 pm

திருச்சியில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்த மத்திய அமைச்சர் சுதர்சன நாச்சியப்பன் விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

பாகிஸ்தான் ராணுவம் இந்திய வீரர்களை சுட்டுக் கொன்றது. இதனால் இந்திய ராணுவத்தை வலிமையற்றதாக கருதி விடமுடியாது. பாகிஸ்தான் ராணுவத்தைவிட  இந்திய ராணுவம் பல மடங்கு வலிமையானது. தமிழகத்தில் அம்மா உணவகம் சிறப்பாக செயல்படுவது போல மத்திய அரசு கொண்டுவந்துள்ள உணவு பாதுகாப்பு திட்டம் மிக அருமையானது. இந்த திட்டத்தை தமிழக அரசு ஆதரிக்க வேண்டும் என்று கூறினார்.