சென்னை வில்லிவாக்கத்தில் டிராவல்ஸ் அதிபர் வீட்டில் தங்கநகை, பணம் திருடுபோனது தொடர்பாக பக்கத்து வீட்டு பெண் கைது செய்யப்ப்டடார்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:
அயனாவரம் கொன்னூர் சாலை பகுதியைச் சேர்ந்தவர் சந்திரசேகர். இவர் மனைவி சொர்ணலதா. சந்திரசேகர் ஒரு டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வருகிறார். சொர்ணலதா ஒரு ஆடிட்டர் அலுவலகத்தில் ஊழியராக வேலை செய்து வருகிறார். இத் தம்பதிக்கு 3 குழந்தைகள் உள்ளன.
தம்பதியினர் புதன்கிழமை காலை பள்ளிக்கு குழந்தைகளை அனுப்பிவிட்டு அலுவலகத்துக்கு புறப்பட்டுச் சென்றார். சொர்ணலதா வழக்கம்போல வீட்டு சாவியை, அங்கு செருப்பு வைக்கும் இடத்தில் மறைத்து வைத்துச் சென்றார்.
இந்நிலையில் மாலையில் சொர்ணலதா வீட்டுக்கு திரும்பி வந்தார். கதவு பூட்டு திறக்கப்பட்டு, பீரோவில் இருந்த 26 பவுன் தங்கநகை, ரூ.44 ஆயிரம் பணம் ஆகியவை திருடப்பட்டிருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார்.
இது குறித்து அவர், அயனாவரம் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அப் புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்தனர். விசாரணையில் சொர்ணலதா மறைத்து வைத்திருந்த சாவியை பயன்படுத்தியே வீட்டு பூட்டையும், பீரோவின் பூட்டையும் திறந்திருப்பது தெரியவந்தது.
மேலும் விசாரணையில் சொர்ணலதா வீட்டின் அருகே வசிக்கும் பிரேமலதா என்பவர்தான் தங்கநகையையும், பணத்தையும் திருடியிருப்பது தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் பிரேமலதாவை கைது செய்து, அவரிடமிருந்த நகையையும், பணத்தையும் பறிமுதல் செய்தனர்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

