சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

கீழக்கரையில் கொலை வழக்கில் தேடப்பட்ட குற்றவாளி கைது

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் கார் ஓட்டுநர் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த குற்றவாளி ஒருவர் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டார்.

Updated On :2 ஆகஸ்ட் 2013, 3:48 am

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் கார் ஓட்டுநர் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த குற்றவாளி ஒருவர் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டார்.

கீழக்கரையில் கடந்த மாரச் மாதம் 16-ம் தேதி சிறுமியிடம் சில்மிசம் செய்ததாக கூறி கார்ஓட்டுநர் ஜானகிராமன் என்பவரை கொலை செய்த வழக்கில் கீழக்கரை புதுகிழக்குத்தெருவைச் சேர்ந்த ஹூசைன்அப்துல்காதர் மகன் சேக்முபாரக்(25) என்பவரை போலீசார் தேடிவந்தனர்.

இவர் வெளிநாட்டிற்கு தப்பி சென்றுவிட்டு கடந்த செவ்வாய்க்கிழமை ஊர் திரும்பியதுடன் புதன்கிழமை மீண்டும் வெளிநாடு செல்வதற்காக தனியார் பேருந்து ஒன்றில் சென்னைக்கு புறப்பட்டார். இது தொடர்பாக கீழக்கரை காவல் ஆய்வாளர் கணேசனுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் குறிப்பிட்ட தனியார் பேருந்தை ஏர்வாடி முக்குரோட்டில் நிறுத்தி சோதனை செய்த போது அதில் சேக்முபாரக் இருந்தது தெரியவந்தது.

 இவரை கைதுசெய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையிலடைத்தனர். இக்கொலை சம்மந்தமாக மேலும் பைசுல்கான்,முனிரா ஆகியோரையும் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றன