மாநில அரசுகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்வதில் புதிய நடைமுறைகளை அறிமுகம் செய்ய வேண்டியது அவசியம் என குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி வலியுறுத்தி உள்ளார்.
தில்லியில் இன்று நடைபெற்ற விழாவில், “புதிய பிகார் - நிர்வாகம் மற்றும் வளர்ச்சியை ஊக்குவித்தல்' என்ற நூலின் பிரதியை நோபல் பரிசு பெற்ற அமர்த்திய சென் வெளியிட, குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி பெற்றுக் கொண்டார். பின்னர் பிரணாப் பேசியதாவது:
அனைத்து மாநிலங்களும் மாறுபட்ட அம்சங்களைக் கொண்டிருந்த போதிலும், ஒரே மாதிரியான பிரச்னைகளை எதிர்கொள்ள வேண்டி உள்ளது. ஏழ்மை, பின்தங்கிய நிலை, உள்கட்டமைப்பு வசதி குறைபாடு மற்றும் நோய்த் தாக்குதல் ஆகிய பிரச்னைகள் அனைத்து மாநிலங்களின் வளர்ச்சிக்கும் மிகப்பெரிய சவாலாக உள்ளன. வளர்ச்சித் திட்டங்கள் இத்தகைய சவால்களை திறமையாகக் கையாள்வதை அடிப்படை நோக்கமாகக் கொண்டிருக்க வேண்டும். மேற்கண்ட பிரச்னைகளுக்குத் தீர்வு காண வேண்டுமானால், மத்திய அரசிடமிருந்து மாநிலங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்யும் முறைகளை மறு ஆய்வு செய்ய வேண்டும். சம்பந்தப்பட்ட அனைவரும் கூடி ஆலோசித்து புதிய நடைமுறைகளைக் கண்டுபிடிக்க வேண்டும். அந்த வழியானது வழக்கமான சட்ட நடைமுறைகளுக்கு அப்பாற்பட்டதாகவும் அனைவரும் ஏற்கத்தக்கதாகவும் இருக்க வேண்டும் என்றார்.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

