புதுச்சேரியில் போலீஸாக நடித்து மூதாட்டியிடம் 3 பவுன் தங்க நகையைத் திருடியவர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
புதுச்சேரி மணக்குள விநாயகர் கோயில் தெருவைச் சேர்ந்தவர் பாலசுந்தரம். இவரது மனைவி பானுமதி (60). இவர் சனிக்கிழமை மாலை முத்து மாரியம்மன் கோயிலுக்குச் சென்று விட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.அப்போது, இரு சக்கர வாகனத்தில் வந்த 2 வாலிபர்கள் பானுமதியை வழிமறித்தனர். அவரிடம், தாங்கள் போலீஸ்காரர்கள் என்றும், நகை பறிக்கும் கும்பல் அதிகமாக நடமாடுவதால் கழுத்தில் நகை எதுவும் அணிந்து கொள்ள வேண்டாம். நகையை கழற்றி பத்திரமாக பையில் வைத்து கொள்ளுங்கள் என்றும் தெரிவித்துள்ளனர்.பானுமதிக்கு உதவுவதாகக் கூறி, அவரிடம் இருந்து 3 பவுன் தங்கச் சங்கிலியை வாங்கி, பேப்பரில் பொட்டலமாக மடித்துக் கொடுத்துள்ளனர்.பானுமதி வீட்டுக்கு வந்து பொட்டலத்தை பிரித்து பார்த்த போது, அதில் சிறுசிறு கற்கள் மட்டுமே இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.இது குறித்து பெரியக்கடை போலீஸர் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

