இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தில் (ஐ.எஸ்.ஆர்.ஓ) விஞ்ஞானியாக பணிபுரிந்தவர் சேது நாராயணன். தற்போது இவர் அமெரிக்காவில் வசித்து வருகிறார். இவருக்கு சொந்தமாக நீலாங்கரை கபாலீஸ்வரர் நகரில் ரூ.1 1/2 கோடி மதிப்பிலான 3750 சதுர அடி நிலம் உள்ளது.
இந்த நிலத்தை போலி ஆவணம் மூலம் அபகரித்து விட்டதாக சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு வந்த புகாரின்பேரில் மத்திய குற்றபிரிவு கூடுதல் கமிஷனர் நல்லசிவம், துணை கமிஷனர் சிவகுமார் ஆகியோர் மேற்பார்வையில் உதவி கமிஷனர் செல்வராஜ், இன்ஸ்பெக்டர் ஆல்ட்ரின் ஆகியோர் விசாரணை நடத்தினர். அப்போது விஞ்ஞானி சேது நாராயணனுக்கு சொந்தமான நிலத்தை மரக்காணத்தை சேர்ந்த வேலாயுதம் என்பவர் போலி ஆவணம் தயாரித்து அபகரித்தது தெரியவந்தது.இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டார்.போலீஸார் இது குறித்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

