கிருஷ்ணகிரி மாவட்டம், கனமூர் வனப் பகுதியில் கரடி தாக்கியதில் காயமடைந்த வனக்காப்பாளர்கள் ரஹமத்துல்லா மற்றும் ரமேஷ் ஆகிய இருவருக்கும் இருவருக்கும் தலா ஒரு லட்சம் ரூபாய் பரிசுத் தொகை வழங்கி முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்:-
கிருஷ்ணகிரி மாவட்டம், கனமூர் வனப் பகுதி, பள்ளக்குழி கிராமம் அருகே 30.6.2013 அன்று கிணற்றில் தவறி விழுந்த கரடியை மீட்கும் முயற்சியில் ஈடுபட்ட போது வனக் காப்பாளர்கள் ரஹமத்துல்லா மற்றும் ரமேஷ் ஆகியோர் கரடியால் தாக்கப்பட்டு பலத்த காயமடைந்துள்ளனர் என்பதை அறிந்து நான் மிகவும் வருத்தமடைந்தேன்.சம்பவ தினத்தன்று கிணற்றுக்குள் தவறி விழுந்த கரடியை வலையில் கட்டிமீட்டு வெளியில் கொண்டு வந்த போது, வலையிலிருந்து விடுபட்டு அருகில் நின்றிருந்த பொது மக்களைத் தாக்க முற்பட்ட கரடியினை வனக் காப்பாளர் ரஹமத்துல்லா தைரியத்துடன் தடுக்க முயன்றுள்ளார். அப்போது, கரடி அவரது தலையிலும், முகத்திலும் தாக்கியதில் பலத்தகாயம் அடைந்துள்ளார். ரஹமத்துல்லாவை கரடியிடமிருந்து மீட்க முற்பட்ட போது, வனக் காப்பாளர் ரமேஷ்க்கு காயம் ஏற்பட்டுள்ளது. கரடி துரத்தியதில் அருகிலிருந்த கிணற்றுக்குள் தவறி விழுந்ததில் அவரது வயிற்றில் அடிப்பட்டுள்ளது.வனக் காப்பளர் ரஹமத்துல்லா சமயோசிதமாக யாருடைய உந்துதலும் இன்றி, தனது உயிரையும் துச்சமென மதித்து, கரடியுடன் போராடி பொது மக்களைக் காப்பாற்ற மேற்கொண்ட துணிச்சலான செயல்பாட்டிற்கு எனது பாராட்டுதல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்நிகழ்வில் ரஹமத்துல்லா மற்றும் அவருக்கு உதவிய வனக் காப்பாளர் ரமேஷ் ஆகிய இருவரையும் நான் பாராட்டுகிறேன். வனக் காப்பாளர்கள் ரஹமத்துல்லா மற்றும் ரமேஷ் ஆகியோரின் வீரச் செயலையும், தன்னலம் கருதாத சமுதாய அக்கறையையும், கடமை உணர்வையும் பாராட்டி அங்கீகரிக்கும் வகையில் இருவருக்கும் தலா ஒரு லட்சம் ரூபாய் பரிசுத் தொகையாக வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன்.மேலும்,இந்நிகழ்வில் காயமடைந்த வனக்காப்பாளர்கள் ரஹமத்துல்லா மற்றும் ரமேஷ் ஆகிய இருவரையும் சிறந்த மருத்துவமனையில் அனுமதித்து அரசு செலவில் நல்ல முறையில் சிகிச்சை அளிக்கவும் நான் கிருஷ்ணகிரி மாவட்ட நிருவாகத்திற்கு உத்தரவிட்டுள்ளேன்.தேவைப்படின், சென்னையிலுள்ள மிகச் சிறந்த தனியார் மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளிக்குமாறும் இவர்களுக்கான முழு மருத்துவ செலவினை அரசு ஏற்றுக்கொள்ளவும் நான் உத்தரவிட்டுள்ளேன்.இவர்கள் இருவரும் விரைவில் பூரண குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என்ற எனதுவிருப்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

