கடையநல்லூர் நகராட்சியில் புதிய குடிநீர் இணைப்புக்களை பெற விரும்புபவர்கள் விண்ணப்பங்களை நகராட்சி அலுவலகத்தில் பெற்றுக்கொள்ளலாம் என ஆணையர் காதர்சுல்தான் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட செய்தி:
கடையநல்லூர் நகராட்சிப் பகுதியில் தற்பொழுது குடிநீர் அபிவிருத்தி திட்டத்தின் கீழ் புதிய பகிர்மான குழாய்கள் பதிக்கப்பட்டுள்ளது. விரைவில் இத்திட்டத்தை செயல்படுத்த உள்ளதால், புதிய பகிர்மானக் குழாய்கள் மூலம் குடிநீóர் விநியோகம் செய்திட ஏதுவாக பொதுமக்கள் தங்களின் பழைய குடிநீர் இணைப்புக்களை, புதிய பகிர்மானக்குழாய்களில் நகராட்சி மூலமாக இணைத்துக் கொள்ள கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்.
இதற்காக, பொதுமக்கள் குடிநீர் இணைப்புக்கான வைப்புத்தொகை ரூ.4000, கூடுதல் வைப்புத் தொகை ரூ.2000 மற்றும் நிலுவையிலுள்ள குடிநீர் கட்டணம் போன்றவற்றை ஜூன் 30ம் தேதிக்குள் நகராட்சி அலுவலகத்தில் செலுத்திட வேண்டும். ஜூன் 30க்கு பின்னர் புதிய பகிர்மானக்குழாய்களிலிருந்து மட்டுமே குடிநீர் விநியோகம் செய்யப்படும்.
மேலும்,இத்திட்டத்தின் கீழ், புதிய குடிநீர் இணைப்புக்களும் வழங்கப்படவுள்ளதால் பொதுமக்கள் புதிய குடிநீர் இணைப்பிற்கான விண்ணப்பத்தினை நகராட்சி அலுவலகத்தில் பெற்றுக் கொள்ளலாம் என்றார் ஆணையர்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

