வியாசர்பாடி போலீஸ் நிலையத்தில் சிறப்பு சப் -இன்ஸ்பெக்டராக பணி புரிந்து வருபவர் பாஸ்கரன். இவர் நேற்று இரவு ஊர்க்காவல் படை வீரர் பிரபாகரனுடன் ரோந்து பணியில் சென்றிருந்தார்.
வியாசர்பாடி சி.கல்யாணபுரம் 2-வது தெருவில் 2 பேரும் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது அங்கு வாலிபர்கள் சிலர் கூட்டமாக நின்று பேசிக்கொண்டிருந்ததை கண்டனர். பின்னர் சப்-இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் அவர்களை அங்கிருந்து கலைந்து போக சொல்லியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அக்கும்பல் சப்-இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் மற்றும், ஊர்க்காவல் படை வீரர் பிரபாகரன் ஆகிய இருவரையும் சரமாரியாக உருட்டுக்கட்டையால் தாக்கினர். இதில் அங்கிருந்து ஓட்டம் பிடித்த பிரபாகரன் அருகில் இருந்த வியாசர்பாடி போலீஸ் நிலையத்துக்கு சென்று தகவலை கூறினார்.
இதனையடுத்து இன்ஸ்பெக்டர் சங்கர் மற்றும் போலீஸார் உடனடியாக அங்கு விரைந்து சென்றனர். அதற்குள் தாக்குதலில் ஈடுபட்ட வாலிபர்கள் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர்.இச்சம்பவம் குறித்து உயர் போலீஸ் அதிகாரிகளும் விசாரணை மேற் கொண்டுள்ளனர்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

