கூடுவாஞ்சேரியை அடுத்த ஊரப்பாக்கத்தில் வசித்து வந்தவர் ஆனந்தன் (45). டெய்லர். இவரது மனைவி சுமதி. இவர்களுக்கு சுஸ்மிதா (18), பிருந்தா (14) ஆகிய 2 மகள்கள் உள்ளனர்.
இதில் சிகை அலங்காரம் படித்துவந்த சுஸ்மிதாவும், ஊரப்பாக்கத்தைச் சேர்ந்த ஒரு வாலிபரும் கடந்த 2 வருடமாக காதலித்து வந்தனர். இவரது காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளனர்.
இந்த நிலையில் சுஸ்மிதா பெற்றோர் எதிர்ப்பை மீறி காதலனை ரகசிய திருமணம் செய்து கொண்டார். இதனை அறிந்த சுஸ்மிதா பெற்றோர் மனம் உடைந்து நேற்று தற்கொலை செய்யும் முடிவில் பூச்சி மருந்து குடித்தனர். வீட்டில் மயங்கி கிடந்தவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு ஆனந்தன் உயிரிழந்தார். சுமதிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கூடுவாஞ்சேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிமாறன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

