திருட்டுப் போன செல்பேசி எண்ணுக்கு, 150 முறை பேசியுள்ளார் தொழில் அதிபர் விக்ரம் அகர்வால்.
ஐபிஎல் சூதாட்டப் புகாரில் சிக்கி சிபிசிஐடி காவல்துறையினரால் நேற்று கைது செய்யப்பட்ட ஹோட்டல் உரிமையாளர் விக்ரம் அகர்வாலிடம் காவல்துறையினர் நேற்று தீவிர விசாரணை நடத்தினர்.
இந்த விசாரணையில், அவர் ஒரே எண்ணுக்கு தொடர்பு கொண்டு 150 முறை பேசியுள்ளார். அந்த செல்பேசி எண், நெல்லை சங்கரன் கோவில் முகவரியில் வாங்கப்பட்டிருந்தது. சங்கரன்கோவில் சென்று, அந்த செல்பேசி எண்ணை வாங்கிய நபரிடம் விசாரித்ததில் செல்போன் காணாமல் போனதாக தெரிவித்துள்ளார்.
எனவே, ஒரு திருட்டுப் போன செல்பேசி எண்ணுக்கு, விக்ரம் அகர்வால் 150 முறை பேசியுள்ளது சிபிசிஐடி விசாரணையில் தெரிய வந்துள்ளது. மேலும், விக்ரம் அகர்வால், குருநாத் மெய்யப்பன், விண்டூ தாரா சிங் ஆகியோர் திருப்பதியில் சந்தித்துப் பேசியுள்ளதும் வெளியாகியுள்ளது.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

