சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

காங்கிரஸ் தலைவர் வி.சி. சுக்லா காலமானார்

சட்டீஸ்கரில் நக்சலைட்டுகள் நடத்திய தாக்குதலில் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த வி.சி. சுக்லா இன்று காலமானார்.

Updated On :11 ஜூன் 2013, 8:57 pm

சட்டீஸ்கரில் நக்சலைட்டுகள் நடத்திய தாக்குதலில் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த வி.சி. சுக்லா இன்று காலமானார்.

கடந்த மாதம் சட்டீஸ்கரில், காங்கிரஸ் தலைவர்களை குறி வைத்து நக்சலைட்டுகள் நடத்திய தாக்குதலில், காங்கிரஸ் மூத்த தலைவர் வி.சி. சுக்லாவின் வயிற்றில் 3 துப்பாக்கிக் குண்டுகள் துளைத்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இதையடுத்து, மிகவும் கவலைக்கிடமான நிலையில், கார்கோனில் உள்ள மேதந்தா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார் சுக்லா. தீவிர சிகிச்சை பெற்று வந்த சுக்லா, இன்று மதியம், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

84 வயதாகும் வித்ய சரண் சுக்லா, காங்கிரஸ் கட்சியின் மிகச் சிறந்த தலைவர்களில் ஒருவராகக் கருதப்பட்டவர். மக்களவைக்கு போட்டியிட்டு 9 முறை தேர்வு செய்யப்பட்ட சுக்லா, 1957ஆம் ஆண்டு நடைபெற்ற முதல் மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்று, மிக இளம் வயதில் நாடாளுமன்ற உறுப்பினரானவர் என்ற பெருமையைப் பெற்றார்.

இந்திரா காந்தி பிரதமராக இருந்த போது அவரது அமைச்சரவையில் சுக்லா இடம்பெற்றிருந்தார். மேலும், அவரது வாழ்நாளில், தொலைத்தொடர்பு, உள்துறை, பாதுகாப்பு, நிதி, திட்டக்குழு, தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறைகளின் அமைச்சராகவும் பணியாற்றியவர்.