சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

ஒபாமா புகைப்படத்துடன் தேர்வு அறை அனுமதிச் சீட்டு

ராஜஸ்தான் மாநிலத்தில் இளைஞர் ஒருவருக்கு, மாநில தேர்வாணையம் நடத்தும் பொறியாளர் பணிக்கான தேர்வுக்கு அமெரிக்க அதிபர் ஒபாமாவின் புகைப்படம் ஒட்டிய தேர்வு அறை அனுமதிச் சீட்டு அனுப்பப்பட்டுள்ளது.

Updated On :11 ஜூன் 2013, 8:12 pm

ராஜஸ்தான் மாநிலத்தில் இளைஞர் ஒருவருக்கு, மாநில தேர்வாணையம் நடத்தும் பொறியாளர் பணிக்கான தேர்வுக்கு அமெரிக்க அதிபர் ஒபாமாவின் புகைப்படம் ஒட்டிய தேர்வு அறை அனுமதிச் சீட்டு அனுப்பப்பட்டுள்ளது.

லல்லுராம் மீனா (25) என்ற பட்டதாரி இளைஞருக்கு, அவரது பெயர், முகவரி கொண்ட மாநில தேர்வாணையம் நடத்தும் தேர்வுக்கான தேர்வு அனுமதிச் சீட்டு வந்துள்ளது. ஆனால், அதில், அமெரிக்க அதிபர் ஒபாமாவின் புகைப்படம் இடம்பெற்றுள்ளது.

இது மிகவும் ஆச்சரியமான விஷயம் என்றால், மேலும் ஒரு ஆச்சரியம் நமக்குக் காத்திருக்கிறது. அதாவது, அந்த இளைஞர் எந்த அரசுத் தேர்வுக்குமே விண்ணப்பிக்கவில்லை என்பதுதான்.

நான் கலைப் பிரிவு பட்டதாரி. அறிவியல் பட்டப்படிப்பு முடித்தவர்கள் மட்டுமே இந்த தேர்வை எழுத முடியும். எந்த குளறுபடியால் இப்படி நடந்திருக்கும் என்று சிந்திக்கவே முடியவில்லை என்று கூறுகிறார் லல்லுராம் மீனா.