முறைகேடுகளைத் தடுக்கவும், உள்நாட்டு தயாரிப்புக்கு முக்கியத்துவம் அளிக்கவும் வகை செய்யும் புதிய ராணுவ தளவாட கொள்முதல் கொள்கை அமலுக்கு வந்தது. இதுதொடர்பாக மத்திய பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
பாதுகாப்பு துறைக்கான ராணுவ தளவாட கொள்முதல் கொள்கை 2013 ஜூன் 1ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. இதன்படி, தளவாட கொள்முதல் தொடர்பான ஒப்பந்தப்புள்ளி நடவடிக்கைகள் வெளிப்படையானதாகவும், நேர்மையானதாகவும் இருக்கும்.ராணுவ தளவாடங்களை உள்நாட்டில் தயாரிப்பதை ஊக்குவிக்கவும், கொள்முதல் நடவடிக்கையின்போது, உள் நாட்டு தயாரிப்புக்கு முக்கியத்துவம் அளிக்கவும் இதில் வகை செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம், தொழில்துறையினர் பயன்பெறுவர் என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இதுகுறித்து மத்திய பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே. அந்தோனி கூறுகையில், ""இந்த புதிய கொள்கை பாதுகாப்புத் துறைக்கும், தொழில் துறையினருக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ராணுவ தளவாட கொள்முதல் நடவடிக்கைகளை விரைவாக முடிக்கும் வகையில் அதற்கான நடைமுறைகள் எளிமையாக்கப்பட்டுள்ளன. இதனால் காலதாமதம் தவிர்க்கப்படும்'' என்றார்.
சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்ட ஹெலிகாப்டர் பேர ஊழல் போன்ற முறைகேடுகளைத் தடுக்கவும் இந்தப் புதிய கொள்கை உதவும் என பாதுகாப்புத் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.பாதுகாப்புத் துறையை மேலும் பலப்படுத்துவது தொடர்பாக பரிசீலிக்கப்பட்டு வருவதாகவும், சம்பந்தப்பட்டவர்களுடன் கலந்தாலோசித்த பிறகு அவை நடைமுறைப்படுத்தப்படும் என்றும் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

