பீகார் அரசு அதிகாரி ஒருவர், வெள்ளியில் தயாரிக்கப்பட்ட குக்கரில் சமையல் செய்து சாப்பிட்டு வந்தது, சோதனையில் தெரிய வந்துள்ளது.
பீகார் காவல்துறையில் பொருளாதாரக் குற்றப்பிரிவு காவல்துறையினர், அரசு பொறியாளர் ஒருவரின் வீட்டில் சோதனை நடத்தினர். அப்போது, அவரது வீட்டில் வெள்ளியில் செய்யப்பட்ட பிரஷர் குக்கரையும் காவல்துறையினர் பறிமுதல் செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
இது பற்றி கூறிய காவல்துறை அதிகாரி, அவரது வீட்டில் சோதனைக்குச் சென்ற போது, வெள்ளி குக்கரைப் பார்த்து நாங்கள் அனைவருமே ஆச்சரியப்பட்டோம். அதுவும் ஒரு சாட்சியாக பறிமுதல் செய்யப்பட்டு நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது என்றார்.
பீகாரில் கட்டடங்களுக்கு அனுமதி அளிக்கும் துறையில் பணியாற்று வரும் ஒரு சாதாரண பொறியாளர் தான் அவதேஷ் குமார் மண்டல். ஆனால், அவர் ஒரு ராஜாவைப் போல வாழ்க்கை நடத்தி வருகிறார். வெறும் இந்த சில்வர் குக்கரை வைத்து இதனைக் கூறவில்லை. பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை நாங்கள் பறிமுதல் செய்துள்ளோம். அதில் ஒன்றரைக் கிலோ தங்கம், 13 கிலோ வெள்ளி, 15 வைர ஆபரணங்களும் அடங்கும் என்கிறார் அந்த அதிகாரி.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

