திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் ஸ்ரீ வெங்கடேச பெருமாளுக்கு கன்னியாகுமரியில் புதிதாகக் கோயில் கட்டுவது என்று திருப்பதி தேவஸ்தானம் தீர்மானித்துள்ளது.இந்தப் புதிய கோயில் கட்டுமானப் பணிக்கான பூமி பூஜை வரும் ஜூன் 4-ம் தேதி (செவ்வாய்க்கிழமை) கன்னியாகுமரியில் நடைபெறவுள்ளது.
இது குறித்து திருமலை திருப்பதி தேவஸ்தானத் தலைவர் கே.ஆனந்தகுமார் ரெட்டி சென்னையில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
கடந்த 2010-ம் ஆண்டு திருப்பதி தேவஸ்தானம் சார்பில் கன்னியாகுமரியில் பிரமாண்ட முறையில் ஒரு திருக்கல்யாண நிகழ்ச்சி நடத்தப்பட்டது. அந்த நிகழ்ச்சிக்குத் திரண்ட பக்தர்களின் கூட்டத்தைக் கண்ட தேவஸ்தான நிர்வாகிகள், ஸ்ரீவெங்கடேச பெருமாளுக்கு கன்னியாகுமரியிலேயே ஒரு திருக்கோயில் கட்டுவது என்று தீர்மானித்தனர்.
அதன்படி தற்போது கோயில் கட்டும் பணி தொடங்கவுள்ளது. இந்த புதிய கோயில் கட்டுவதற்காக விவேகானந்தா கேந்திரம் ஐந்தரை ஏக்கர் நிலத்தை நன்கொடையாக வழங்கியுள்ளது. கன்னியாகுமரி விவேகானந்தபுரத்தில் இந்தத் திருக்கோயில் கட்டும் பணிக்காக திருமலை திருப்பதி தேவஸ்தானம் ரூ.22 கோடியே 50 லட்சம் ஒதுக்கியுள்ளது. கோயில் கட்டுவதற்கான பூமி பூஜை வரும் ஜூன் 4-ம் தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 6.30 மணிக்கு நடைபெறும். கோயில் கட்டும் பணி இரண்டு ஆண்டுகளில் நிறைவு பெறும்.
திருப்பதி கோயிலில் நடைபெறும் அனைத்து பூஜைகளும் கன்னியாகுமரியில் அமையவுள்ள பெருமாள் கோயிலிலும் ஆகம விதிகளின்படி நடைபெறும். மேலும் இந்தக் கோயிலில் வேத பாடசாலை, கோசாலை மற்றும் திருமண மண்டபம் போன்றவையும் நிறுவப்படும். பக்தர்களுக்காக கன்னியாகுமரியிலேயே பிரசாதம் தயாரிக்கப்படும்.
தமிழ்நாட்டு பக்தர்களின் நீண்ட நாளைய கோரிக்கையை ஏற்று தற்போது கன்னியாகுமரியில் இந்த புதிய திருக்கோயில் அமையவுள்ளது. ஸ்ரீவெங்கடேச பெருமாள், ஸ்ரீதேவி தாயார் மற்றும் பூதேவி தாயார் சுவாமிகளுடன் அமையவுள்ள இந்தக் கோயிலானது கன்னியாகுமரியின் கலியுக வைகுண்டம் என போற்றப்படும் என்றார் ஆனந்தகுமார் ரெட்டி.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

