தமிழக அரசின் தொடர் முயற்சியின் காரணமாக, காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பு மத்திய அரசிதழில் வெளியிடப்பட்டது. ஆனால் அந்த தீர்ப்பினை நிறைவேற்றுவதற்கான காவிரி மேலாண்மைக்குழுவை அமைக்க மத்திய அரசு காலம் தாழ்த்தியதால், தமிழக அரசு மீண்டும் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட், தற்காலிகமாக காவிரி மேற்பார்வை குழுவை நியமித்தது. இதன் கூட்டத்தை ஜூன் 1-ந்தேதி கூட்டவும் நீதிமன்றம் உத்தரவிட்டது.
தற்காலிக காவிரி மேற்பார்வை குழுவின் முதல் கூட்டம் தில்லியில் இன்று நடந்தது. இக்கூட்டம் குழு தலைவரான மத்திய நீர் வளத்துறை செயலாளர் எல்.கே. சர்க்கார் தலைமையில் நடந்தது. அப்போது, தமிழகத்தில் குறுவை சாகுபடிக்காக உடனே தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்று தமிழகம் தரப்பில் வலியுறுத்தப்பட்டது. ஆனால், தற்போதைய சூழ்நிலையில் தமிழகத்துக்கு தண்ணீர் தர முடியாத நிலையில் இருக்கிறோம் என்றும்,தமிழகத்துக்கு தண்ணீர் திறப்பது குறித்து 4 வாரத்துக்கு பிறகுதான் பதில் சொல்ல முடியும் என்றும் கர்நாடக தலைமை செயலாளர் கூறினார்.இதனால் கூட்டத்தில் சுமுகமான முடிவு ஏற்படவில்லை. முதல் கூட்டத்தில் எந்த முடிவும் எட்டப்படாததால், ஜூன் 12-ம் தேதி மீண்டும் மேற்பார்வைக்குழு கூடும் என்று நீர்வளத்துறை செயலாளர் சர்க்கார் அறிவித்தார்.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

