சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

கன்னியாகுமரியில் தொடரும் மழை: அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு

பேச்சிப்பாறை அணையில் 58.6 மி.மீ. மழையும், பெருஞ்சாணி அணையில்  32.8 மி.மீ. மழையும் பெய்துள்ளது. இந்த மழையால் பேச்சிப்பாறை அணைக்கு வினாடிக்கு 464 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அதுபோல் பெருஞ்சாணி அணைக்கு 71 கன அடி தண்ணீரும், சிற்றாறு-1 அணைக்கு 26 கன அடியும், சிற்றாறு

Updated On :2 ஜூன் 2013, 12:46 am

கன்னியாகுமரி மாவட்டத்தில் பெய்து வரும் மழையால் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி ஆகிய அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இந்த மாவட்டத்தில் அதிகபட்சமாக இரணியல் பகுதியில் 142 மி.மீ. மழை பதிவாகி உள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் 24 மணி நேரத்தில் இன்று காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த மழை அளவு விவரம் வருமாறு:

பேச்சிப்பாறை அணையில் 58.6 மி.மீ. மழையும், பெருஞ்சாணி அணையில்  32.8 மி.மீ. மழையும் பெய்துள்ளது. இந்த மழையால் பேச்சிப்பாறை அணைக்கு வினாடிக்கு 464 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அதுபோல் பெருஞ்சாணி அணைக்கு 71 கன அடி தண்ணீரும், சிற்றாறு-1 அணைக்கு 26 கன அடியும், சிற்றாறு-2 அணைக்கு 42 கன அடி தண்ணீரும் வந்து கொண்டிருக்கிறது.இந்த மாவட்டத்தில் குருந்தன்கோடு 25.2 மி.மீ., அடையாமடை 52 மி.மீ., கோழிப்போர்விளை 35 மி.மீ., புத்தன் அணை 32.6 மி.மீ., திற்பரப்பு 53 மி.மீ., நாகர்கோவில் 20 மி.மீ., பூதப்பாண்டி 20 மி.மீ., சுருளோடு 36 மி.மீ., ஆணைக்கிடங்கு 23 மி.மீ., பாலமோர் 46 மி.மீ., மயிலாடி 13.4 மி.மீ., கொட்டாரம் 4.5 மி.மீ. மழை பதிவாகி உள்ளது.

மாவட்டத்தில் இன்று காலை முதல் ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. குளிர்ந்த காற்று வீசி வருகிறது. வானம் மேகமூட்டத்துடன் காணப்படுகிறது. மழையில் அணைகள், குளங்கள் ஓரளவுக்கு நிரம்பினால்தான் கன்னிப்பூ சாகுபடியைத் தொடங்க முடியும் என்கின்றனர் விவசாயிகள்.