சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

இன்று மிக முக்கிய மாற்றங்கள் ஏற்படும் : அருண் ஜேட்லி சூசகம்

இன்று கிரிக்கெட் வாரியத்தில் மிக முக்கிய மாற்றங்கள் ஏற்படும் என்று பிசிசிஐ துணைத் தலைவர் அருண் ஜேட்லி தெரிவித்துள்ளார்.

Updated On :1 ஜூன் 2013, 5:44 pm

இன்று கிரிக்கெட் வாரியத்தில் மிக முக்கிய மாற்றங்கள் ஏற்படும் என்று பிசிசிஐ  துணைத் தலைவர் அருண் ஜேட்லி தெரிவித்துள்ளார்.

பிசிசிஐயின் செயலாளர் சஞ்சய் ஜக்தாலே மற்றும் நிர்வாகி அஜய் ஷிர்கே இருவரும் தங்களது பதவியை ராஜினாமா செய்வதாகக் கடிதம் அளித்துள்ள நிலையில், பிசிசிஐயின் 5 துணைத் தலைவர்களும் இன்று தங்களது ராஜினாமாக் கடிதங்களை அளிப்பார்கள் என்று கூறப்பட்டு வந்தது. பிசிசிஐயின் தலைவர் சீனிவாசனை பதவி விலகக் கோரி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், இன்று காலை செய்தியாளர்களிடம் பேசிய பிசிசிஐ துணைத் தலைவர்களில் ஒருவரான அருண் ஜெய்ட்லி, இன்று ஒரு நாள் காத்திருங்கள். மிக முக்கியமான மாற்றங்கள் இன்று ஏற்படும்  என்று சூசகமாகத் தெரிவித்தார்.