சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

வெயில் வாட்டி எடுக்கும் வட மாநிலங்கள்

இந்தியாவின் தென்பகுதி மாநிலங்களை விட, வட மாநிலங்களில் வெயில் அதிகமாக வாட்டி வருகிறது.

Updated On :21 மே 2013, 8:49 pm

இந்தியாவின் தென்பகுதி மாநிலங்களை விட, வட மாநிலங்களில் வெயில் அதிகமாக வாட்டி வருகிறது.

இதுவரை இல்லாத அளவுக்கு இந்த ஆண்டு கோடைக் காலம்  அனல் வாட்டி எடுக்கும் காலமாக மாறியுள்ளது. தில்லி, உத்தரப்பிரதேசம், ராஜஸ்தான், பஞ்சாப், ஹரியானா, மத்தியப் பிரதேசம், பீகார் மாநிலங்களில் மதிய வேளைகளில் சாலைகளில் ஆள் நடமாட்டமே இல்லாத அளவுக்கு வெயில் அடிக்கிறது. அனல் காற்று வீசுகிறது.

தில்லியில் சராசரியை விட 5 டிகிரி அதிகமாக 44.5 டிகிரி செல்சியஸ் வெயில் பதிவாகியுள்ளது. கடந்த பத்து ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு தில்லியில் வெயில் வாட்டி எடுப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.