கச்சத் தீவை மீட்க வேண்டும் என்று தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் குறித்து தமிழக முதல்வர் ஜெயலலிதா பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
அவர் எழுதியுள்ள கடிதத்தில், தமிழக சட்டப்பேரவையில், தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் கொடூர்த் தாக்குதல்களையும், துன்புறுத்தல்களையும், சிறைபுடிக்கும் நிகழ்வுகளையும் கருத்தில் கொண்டு, பெருபாரி வழக்கில், உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பின் படி, கச்சத்தீவு இலங்கைக்கு வழங்கப்பட்டது சட்டப்படி செல்லத்தக்கது அல்ல என்பதாலும், இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்களுக்கு ஏற்படும் வாழ்வாதார பாதிப்புக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையிலும், இந்த பிரச்னைக்கு நிரந்தரத் தீவு காணும் வகையிலும், இந்திய இலங்கை ஒப்பந்தத்தின் மூலம் இலங்கை நாட்டுக்கு ஒப்படைக்கப்பட்ட கச்சத்தீவு மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளை தனது ஆளுகையின் கீழ் கொண்டு வர உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்தியப் பேரரசை தமிழக சட்டப்பேரவை வலியுறுத்துகிறது என்று தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது.
எனவே, இதனை உங்களது கவனத்துக்குக் கொண்டு வருவதுடன், இது குறித்து உடனடியாக நடவடிக்கை எடுத்து தமிழக மீனவர்களின் வாழ்வாதாரத்தை காக்க வேண்டும் என்றும் முதல்வர் ஜெயலலிதா கேட்டுக் கொண்டுள்ளார்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

