பெரம்பலூர் மாவட்டம் ஆவணங்குடியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் என்பவரது மகன் ராஜராஜன்(11). பள்ளி விடுமுறை என்பதால் உள்ள தஞ்சை உள்ள உறவினர் ராஜேந்திரன் என்பவரது வீட்டிற்கு ராஜராஜன் வந்தான். நேற்று ராஜராஜன், ராஜேந்திரன் மகன் அரவிந்தன்(7) மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த 4 சிறுவர்களுடன் சேர்ந்து பள்ளியக்ரஹாரம் அருகே உள்ள வெண்ணாற்று நீரேற்று நிலையத்திற்கு குளிக்க சென்றான்.
நீரேற்று நிலையம் அருகில் தேங்கியிருந்த 20 அடி ஆழ நீரில் இவர்கள் குளிக்கும்போது எதிர்பாராத விதமாக ராஜராஜனும், அரவிந்தனும் தத்தளித்தனர். இதனைக் கண்ட மற்ற சிறுவர்கள் அவர்களை மீட்க முயற்சி செய்தனர். ஆனால் அதற்குள் சிறுவர்கள் இருவரும் மூழ்கிவிட்டனர். இதுகுறித்து தகவலறிந்த கோட்ட அலுவலர் ரவிச்சந்திரன் உத்தரவின்பேரில், நிலைய அலுவலர் சுந்தர் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து நீரில் அடியில் சேற்றில் சிக்கிக்கொண்டிருந்த 2 சிறுவர்களையும் பிணமாக மீட்டனர்.இதுகுறித்து தஞ்சை மேற்கு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

