சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

மகேசன் புயலால் தமிழகத்துக்கு மழை வாய்ப்பு இல்லை: ரமணன்

தமிழ்நாட்டுக்கு தெற்கே, தென்மேற்கு வங்க கடலில் 3 நாட்களுக்கு முன் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி அது தீவிரம் அடைந்து காற்றழுத்த மண்டலமாக மாறியது. இந்த புயலுக்கு 'மகேசன்' என பெயரிடப்பட்டது. இந்த புயல் வடமேற்கு திசை நோக்கி நகர்ந்தால் தமிழ் நாட்டில் நல்ல மழை பெய்யும் வாய்ப்பு

Updated On :11 மே 2013, 9:18 pm

தமிழ்நாட்டுக்கு தெற்கே, தென்மேற்கு வங்க கடலில் 3 நாட்களுக்கு முன் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி அது தீவிரம் அடைந்து காற்றழுத்த மண்டலமாக மாறியது. இந்த புயலுக்கு 'மகேசன்' என பெயரிடப்பட்டது. இந்த புயல் வடமேற்கு திசை நோக்கி நகர்ந்தால் தமிழ் நாட்டில் நல்ல மழை பெய்யும் வாய்ப்பு இருந்தது. ஆனால் இன்று மதியம் புயல் திசை மாறி நகர்ந்ததால் தமிழ்நாட்டுக்கு மழை வாய்ப்பு இல்லை என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து வானிலை ஆய்வு மைய இயக்குனர் ரமணன் கூறியதாவது:-

தென்மேற்கு வங்க கடலில் உருவான 'மகேசன்' புயல் இன்று காலை சென்னைக்கு தென் கிழக்கே 1550 கி.மீ. தொலைவில் மையம் கொண்டு இருந்தது.இன்று மதியம் சென்னையில் இருந்து 1300 கி.மீ தொலைவில் நிலைகொண்டுள்ளது. இது வடமேற்கு திசை நோக்கி நகர்ந்தால் தமிழ்நாட்டில் பலத்த மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அடுத்த 34 மணி நேரத்தில் வடக்கு திசை நோக்கி நகரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது புயல் வங்காள தேசம், மியான்மர் நோக்கி திசை மாறியது. இதனால் தமிழகத்தில் மழை வாய்ப்பு இல்லை என தெரிவித்தார்.