சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

பணிக் காலத்தில் மரணம் அடைந்த காவலர்களின் குடும்பங்களுக்கு நிதியுதவி

பணிக்காலத்தின் போது மரணம் அடைந்த காவலர்களின் குடும்பங்களுக்கு தமிழக முதல்வர் நிதியுதவி அறிவித்துள்ளார்.

Updated On :11 மே 2013, 7:50 pm

பணிக்காலத்தின் போது மரணம் அடைந்த காவலர்களின் குடும்பங்களுக்கு தமிழக முதல்வர் நிதியுதவி அறிவித்துள்ளார்.

தருமபுரி நகர காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணி புரிந்து வந்த சு.மதியழகன் 1.5.2013 அன்று மாரடைப்பால் காலமானார்.

சேலம் மாவட்டம், வீராணம் காவல் நிலையத்தில் தலைமைக் காவலராகப் பணி புரிந்து வந்த ஆ.வைத்தியலிங்கம் உடல்நலக்குறைவால் 2.5.2013 அன்று காலமானார். திண்டுக்கல் மாவட்டம், வடமதுரை காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராகப் பணி புரிந்து வந்த ஞ.செல்வராஜ் 3.5.2013 அன்று அழகர்சிங்கம்பட்டி அருகே ஏற்பட்ட சாலை விபத்தில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம்,  சிறப்பு  இலக்குப் படையில்  உதவி ஆய்வாளராகப் பணி புரிந்து வந்த மு.சந்திரன் உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி  3.5.2013 அன்று உயிரிழந்தார். திருநெல்வேலி மாநகர மதுவிலக்கு அமல்பிரிவில் தலைமைக் காவலராகப் பணி புரிந்து வந்த ஞ.காளிதாஸ் அவர்கள் உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி 4.5.2013 அன்று காலமானார்.

திருப்பூர் மாவட்டம், வரதராஜபுரம், உடுமலை – பல்லடம் சாலையில் 6.5.2013 அன்று ஏற்பட்ட சாலை விபத்தில் தளி காவல் நிலைய சிறப்பு  உதவி ஆய்வாளர் ஆ.சண்முகசுந்தரம் மற்றும் கொமரலிங்கம் காவல் நிலையக் காவலர் ஞ.தன்னாசி ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் காஞ்சிபுரம் மாவட்டம், சோமங்கலம் காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணி புரிந்து வந்த சூ.மாசிலாமணி 7.5.2013 அன்று குரோம்பேட்டை அருகே ஏற்பட்ட சாலை விபத்தில் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி  உயிரிழந்தார்.

காவல் துறை உதவி ஆய்வாளர்கள் செல்வராஜ், சந்திரன்; சிறப்பு  உதவி ஆய்வாளர்கள் மதியழகன், சண்முகசுந்தரம், மாசிலாமணி; தலைமைக் காவலர்கள் வைத்தியலிங்கம், காளிதாஸ் மற்றும் காவலர் தன்னாசி ஆகியோரின் அகால மரணத்தால் சொல்லொணாத் துயரத்தில் ஆழ்ந்திருக்கும் அவர்களது குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் முதல்வர் தெரிவித்துள்ளார்.

சாலை விபத்தில் உயிரிழந்த காவல் துறை உதவி ஆய்வாளர் செல்வராஜ், சிறப்பு உதவி ஆய்வாளர்கள் சண்முகசுந்தரம், மாசிலாமணி, காவலர் தன்னாசி, மாரடைப்பால் காலமான சிறப்பு உதவி ஆய்வாளர் மதியழகன்; உடல்நலக் குறைவால் காலமான உதவி ஆய்வாளர் சந்திரன், தலைமைக் காவலர்கள் வைத்தியலிங்கம் மற்றும் காளிதாஸ் ஆகியோரின் குடும்பங்களுக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து  தலா மூன்று லட்சம்  ரூபாய்  வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.