தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் கபில் சிபல் சட்டத் துறையையும், சாலை மற்றும் போக்குவரத்துத் துறை அமைச்சர் சி.பி. ஜோஷி ரயில்வே அமைச்சகத்தையும் கூடுதலாக பொறுப்பேற்க உள்ளனர்.
சட்டத் துறை அமைச்சராக இருந்த அஸ்வனி குமாரும், ரயில்வே அமைச்சராக இருந்த பவன்குமார் பன்சாலும் பதவி விலகியதை அடுத்து, இவ்விரு துறைகளையும், கபில் சிபலும், ஜோஷியும் கூடுதல் பொறுப்பாக ஏற்று கவனிக்க உள்ளனர்.
மத்திய அமைச்சரவையில் மேற்கொள்ளப்பட உள்ள இந்த மாற்றம் குறித்து பிரதமர் மன்மோகன் சிங், குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
கடந்த ஆண்டும், திரிணாமூல் காங்கிரஸ் கட்சித் தலைவர் முகுல் ராய், ரயில்வே அமைச்சர் பொறுப்பில் இருந்து விலகியதை அடுத்து, ஜோஷி தான் ரயில்வே அமைச்சகப் பொறுப்பை கூடுதலாக கவனித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

